×

வடகுடி ஊராட்சி பாலக்காடு கிராமத்தில் தொகுப்பு வீடு இடிந்து தொழிலாளி காயம்

நாகை, அக்.22: நாகை அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி காயமடைந்தார். நாகை அருகே வடகுடி ஊராட்சி பாலக்காடு கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தொகுப்பு வீடு கட்டப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்நிலையில் பழுதடைந்த தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் வசித்த தட்சிணாமூர்த்தி (50) என்ற கூலித்தொழிலாளி காயமடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் சரபோஜி கூறும்போது, அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகள் பழுதடைந்து ஆண்டுக்கணக்கில் ஆகிவிட்டது. ஆனால் அதை பழுது பார்க்காமல் இருந்த காரணத்தால் வீடு இடிந்து விழுந்ததில் அங்கு வசித்து வந்த தட்சிணாமூர்த்தி என்பவர் காயமடைந்தார். அந்த பகுதியில் உள்ள 20 தொகுப்பு வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த வீடுகளை சரி செய்ய வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு நிவாரண வழங்க வேண்டும் என்றார்.

Tags : house ,village ,Palakkad ,
× RELATED மொபட் மோதி தொழிலாளி பலி