×

அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு பைக்கில் சென்ற ஆசிரியைகளிடம் கத்தியை காட்டி மிரட்டி 14 பவுன் நகை பறிப்பு

கரூர், அக். 22: கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை(40). இவர், ஏமூர் சீத்தப்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் ரமாபிரியா(35). இவர், இதே பள்ளியில் உதவி தலைமையாசியையாக பணியாற்றி வருகிறார். பள்ளிகளில் அலுவலக பணிகளுக்காக இருவரும் தினமும் பள்ளி சென்று வந்துள்ளனர். நேற்றும் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு நேற்று மாலை பைக்கில் இருவரும் வீடு நோக்கி சென்றனர்.ஏமூர் பகுதியின் வழியாக காந்திகிராம் நோக்கி சென்ற போது, பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், ஆசிரியைகள் இருவரையும் வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, ரமாபிரியா கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டனர். தொடர்ந்து, மணிமேகலையின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிக் கொடியை கேட்டு மிரட்டினர்.

மணிமேகலை தர மறுத்த நிலையில், கத்தியால் மணிமேகலையின் முகத்தில் கீறி விட்டு, அவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிக் கொடியையும் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். இதில் காயமடைந்த மணிமேகலை கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். சம்பவம் குறித்து மிகவும் தாமதமாக கேள்விப்பட்ட வெள்ளியணை போலீசார், ஆசிரியைகள் இருவரிடம் நடந்த இந்த வழிப்பறி சம்பவம் குறித்து வழக்கு பதிந்து அடையாளம் தெரியாத மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த வழிப்பறி சம்பவம் காரணமாக ஏமூர் பகுதியில் நேற்று மாலை பரபரப்பு ஏற்பட்டது.

Tags : teachers ,jewelery ,
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்