×

நீலகிரி மாவட்டத்தில் 30 பேருக்கு கொரோனா

ஊட்டி, அக். 22:நீலகிரி மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6210 ஆக உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 210 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 68 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இது வரை மொத்தம் 5 ஆயிரத்து 733 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 441 பேர் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், கடந்த இரு நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Tags : Corona ,district ,Nilgiris ,
× RELATED மாவட்டத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா