×

நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்

ஈரோடு, அக். 22:  ஈரோடு மாவட்டத்தில் நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தலா ரூ.5 ஆயிரம் மதிப்பில் விலையில்லா தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின், ஒருங்கிணைந்த கைவினை பொருட்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளாச்சிக்கழகம் (பூம்புகார்) மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நலிவடைந்த 200 மண்பாண்ட தொழில் செய்யும் கைவினைஞர்களின் திறமையை உயர்த்தவும்,  அவர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா தொழில் உபகரணங்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதில், மாவட்ட தொழில் மையத்தின் பொதுமேலாளர் திருமுருகன், கைவினை பொருட்கள் சேவை மையத்தின் முதுநிலை உதவி இயக்குநர் தனராஜன், பூம்புகார் உதவி மேலாளர் சேவியர், விற்பனை மேலாளர் சரவணன் மற்றும் கைவினை கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : pottery workers ,
× RELATED விழாவுக்கு சில நாட்களே உள்ள நிலையில்...