×

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸில் கலைநயமிக்க நகைகள் கண்காட்சி

சென்னை: தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி தொடங்கியுள்ளது. தலைசிறந்த வடிமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த நகைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இந்த கண்காட்சியை விஜய், எழிலரசி மற்றும் சௌத்திரி குடும்பத்தினர் தொடங்கி வைத்தனர். அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’, பிரம்மாண்ட வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’,

பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட ‘பிரீசியா’, கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட ‘எத்தினிக்’, நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகையான ‘டிவைன்’, குழந்தைகளுக்கான ‘ஸ்டார்லெட்’ ஆகிய நகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. வரும் 25ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ள நகைகளை வாடிக்கையாளர்கள் சிறப்பு விலையில் வாங்கலாம். வைரத்தின் மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது.

Tags : Artistic Jewelery Exhibition ,Malabar Gold ,
× RELATED எம்பி திருநாவுக்கரசர் பேட்டி...