×

நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், அக்.21: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய கோரி நாகர்கோவிலில் மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில உரிமைகளுக்கு எதிராகவும், சமூக நீதிக்கு எதிராகவும் செயல்படும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மனோகர ஜஸ்டஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் உஷாபாசி தொடக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மோகன், ராஜநாயகம், அந்தோணி, அசிஸ், பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அகம்மது உசேன் நிறைவுரை வழங்கினார். சந்திரபோஸ், சந்திரன், லட்சுமி, ஜோசப், தாசம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : demonstration ,Nagercoil ,
× RELATED ஆரல்வாய்மொழியில் இருந்து...