×

வேப்பூர் அருகே திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்ம சாவு கணவர் அதிரடி கைது

வேப்பூர், அக். 21: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூதாமூர், பூந்தோட்டம் பாரதி தெருவை சேர்ந்தவர் ஜெயந்தி. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது இரண்டாவது மகள் நிலா(22), முதுகலை பட்டதாரி.
இவருக்கும், வேப்பூர் வட்டம் வரம்பனூர் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி மகன் பொறியியல் பட்டதாரி சபரிநாதன்(30) என்பவருக்கும் கடந்த செப்டம்பர் 4ம் தேதி விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.  திருமணமான பின் இவர் வரம்பனூரில் உள்ள தனது கணவர் வீட்டில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்து இவரிடம் இவரது கணவர் சரிவர பேசாததால் மன வருத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் நிலாவின் மாமனார், மாமியார் வெளியூர் சென்றுவிட்டனர். அவரது கணவரும் விவசாய வேலைக்காக வெளியே சென்ற நிலையில், நிலா வீட்டில் தனிமையில் இருந்துள்ளார். காலை 11 மணியளவில் கணவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்துபோது நிலா வீட்டினுள் தூக்கிட்டு இறந்திருந்தார்.  தகவல் அறிந்த நிலாவின் தாயார் ஜெயந்தி வந்து, இறந்து கிடந்த பெண்ணின் உடலை பார்த்து கதறி அழுதார். வேப்பூர் போலீசார் வந்து நிலாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நிலாவின் தாயார் ஜெயந்தி, விருத்தாசலம் கோட்டாட்சியரிடம் கொடுத்த புகாரில், திருமணமாகி 45 நாட்களே ஆன நிலையில் எனது மகள் தற்கொலை செய்து கொண்டதில் எனக்கு சந்தேகம் உள்ளது. திருமணத்திற்கு எல்லா சீர்வரிசையும் செய்து கொடுத்தோம். ஆனால் திருமணம் ஆன ஒரு வாரத்தில் மாப்பிள்ளை வீட்டார் எனது மகளிடம் 40 பவுன் நகை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். மேலும் எனது மகளிடம் அவரது கணவர் சரிவர பேசாததாலும் மன வருத்தமடைந்துள்ளார்.

எனது மகளின் தற்கொலையில் சந்தேகம் உள்ளதால் அவரது கணவர் சபரிநாதன் மற்றும் அவரது உறவினர்களை விசாரிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார். இதையடுத்து திட்டக்குடி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் உத்தரவின்பேரில், வேப்பூர் வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாக சபரிநாதன் மீது வழக்கு பதிந்து கைது அவரை செய்தனர்.

Tags : death ,death husband ,Veppur Arrest ,
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு