×

மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் குறைகிறது

நாமக்கல், அக்.21: நாமக்கல் மாவட்டத்தில் நேற்று, மாவட்ட விளையாட்டு அலுவலக பெண் ஊழியர், அரசு பள்ளி ஆசிரியர், அரசு பஸ் டிரைவர், திருச்செங்கோட்டில் வருவாய் ஆய்வாளர் உள்பட 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 8,279 ஆக அதிகரித்துள்ளது.  மாவட்டத்தில் இதுவரை 7,354 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 91 பேர் பலியான நிலையில், 834 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருகிறது. கடந்த இரு மாதமாக தினமும் 150 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். கடந்த இரு நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருக்கிறது.

மேலும் ஒரு ஆய்வகத்துக்கு அனுமதி: நாமக்கல் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா தெற்று 150 ஆக தொடர்ந்தது. இதுவரை 8,279 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. பொதுமக்களிடம் சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுத்து அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகினறனர்.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்ய மேலும் ஒரு ஆய்வகத்துக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. திருச்செங்கோட்டில் தனியார் மூலம் ட்ரூநெட் கொரோனா பரிசோதனை ஆய்வகம் அமைகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், ‘இதுவரை ட்ரூநெட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்தாலும், ஆர்டிபிசிஆர் ஆய்வுக்கு பாசிட்டிவ் கேஸ்கள் அனுப்பப்படும். ஆனால் தற்போது ட்ரூநெட் கருவி மூலம் கொரோனா ஆய்வு செய்யதாலே, பாசிட்டிவ் என உறுதி செய்யப்படும். நாளொன்றுக்கு சுமார் 100 மாதிரிகள் வரை ஆய்வு செய்ய முடியும். 4 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும். பழனி மற்றும் திருச்செங்கோட்டில் இந்த ட்ரூநெட் ஆய்வகம் அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது. ஒருவருக்கு பரிசோதனை செய்ய ₹2,500 கட்டணமாக வசூலிக்கப்படும். விரைவாக முடிவுகள் பெற்று சிகிச்சை அளிக்கப்படும்’ என்றார்.

Tags : Corona ,district ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...