தினந்தோறும் வயல்களில் நுழைகிறது நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள்; விவசாயிகள் வேதனை

ஓசூர், அக்.21:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கோபசந்திரம், ராமாபுரம் போடூர், ஆழியாளம், பாத்தகோட்டா, காமன்தொட்டி, குக்களப்பள்ளி, பண்ணப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது நல்ல விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சானமாவு வனப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் கோபசந்திரம், போடூர் கிராமத்திற்குள் 20க்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள் நெல் வயல்களுக்குள் புகுந்தது. அப்போது அங்கு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை நாசப்படுத்தி மீண்டும் சானமாவு வனப்பகுதிக்கு சென்றது.

இந்நிலையில், நேற்று காலை அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை காண சென்ற விவசாயிகள் பயிர்கள் யாவும் சேதப்படுத்தப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் காட்டு பன்றிகளால் சேதமான பயிரை சோகத்துடன் பார்வையிட்டனர்.  இது குறித்து விவசாயிகள் கூறுகையில், காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் 10 மூட்டை நெல் கிடைக்க வேண்டிய வயலில் ஒரு மூட்டை அளவுக்கு நெல் கிடைக்கும். எனவே விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்து வரும் காட்டு பன்றிகளை பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>