நியூ நீல்கிரிஸ் பேக்கரி, ஸ்வீட்ஸ் திறப்பு விழா

கிருஷ்ணகிரி, அக்.21: கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில், நியூ நீல்கிரிஸ் பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் திறப்பு விழா நடைப்பெற்றது. விழாவை இயக்குனர் ராஜா, பிரபு ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைத்தனர். சிறப்பு விருந்தினராக நீல்கிரிஸ் குருப்ஸ் தலைவர் நீல்கிரிஸ் முருகன், வெண்ணிலா முருகன் ஆகியோர் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனை தொடங்கி வைத்தனர். நீல்கிரிஸ் குருப்ஸ் தலைவர் முருகன் கூறுகையில், நீல்கிரிஸ் பேக்கரி கடந்த 35 வருடங்களாக மக்களின் பேராதரவுடன் கிருஷ்ணகிரி, கே. தியேட்டர் ரோட்டில் இயங்கி வருகிறது.

இதன் மற்ெறாரு கிளையாக நியூ நீல்கிரிஸ் பேக்கரி மற்றும் ஸ்வீட்ஸ் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து நல்லாதரவு தருமாறு கேட்டுக்கொண்டார். திறப்பு விழாவில் தொழிலதிபர்கள், வணிகர் சங்கத்தினர் மற்றும் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் கலந்து கொண்டனர். ...

Related Stories:

>