×

தர்மபுரி மாவட்டத்தில் 13வயது சிறுவன் உள்பட 66பேருக்கு கொரோனா

தர்மபுரி, அக்.21: பாப்பிரெட்டிப்பட்டி புதுப்பட்டி 47வயது பெண் தூய்மை பணியாளர், அரூர் சின்னக்குப்பம் 39வயது அரசு பஸ் ஓட்டுனர், செல்லம்பட்டி 30வயது அலுவலக உதவியாளர், பெத்தாம்பட்டி 42வயது விவசாயி, அரூர் அம்பேத்கர் நகர் 32வயது போலீஸ் ஏட்டு, காரிமங்கலம் மாட்லாம்பட்டி 13, 16வயது மாணவர்கள், அரூர் பறையப்பட்டி 18வயது மாணவன் உள்ளிட்ட 66பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று கொரோனாவுக்கு மேலும் 2பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 49பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 5306பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4479பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீட்டிற்கு திரும்பினர். 778பேர் அரசு மருத்துவமனையிலும், வீட்டிலும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரேநாளில் 85பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர்.

Tags : Corona ,Dharmapuri district ,
× RELATED கொரோனாவுக்கு உலக அளவில் 1,485,520 பேர் பலி