×

அனைத்து கட்சி கருத்துக்கேட்பு கூட்டம்

தர்மபுரி, அக்.21: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஏற்கனவே உள்ள வாக்கச்சாவடிகளில் அதிக வாக்காளர்கள் இருந்தால், அதை பிரித்து, மாற்று வாக்குச்சாவடியில் இணைத்து தரவேண்டும், வாக்குச்சாவடி அருகில் இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் இருந்தால், வாக்காளர்களுக்கு எளிதாக வாக்களிக்கும் வகையில் அருகே வாக்குச்சாவடி அமைத்து தரவேண்டும் என அரசியல் கட்சியினர் கருத்துக்கள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில், சப் கலெக்டர் பிரதாப், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் (பொ) தணிகாசலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) தேன்மொழி, வட்டாட்சியர் (தேர்தல்) கனிமொழி, அனைத்து வட்டாட்சியர்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் திமுக வக்கீல் தாஸ், அதிமுக சுப்பிரமணியம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேவராஜ், தேமுதிக உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : party referendum meeting ,
× RELATED உதயநிதி ஸ்டாலின் கைது கண்டித்து மாவட்டம் முழுவதும் திமுகவினர் மறியல்