×

ஒகேனக்கல் அருகே அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி

பென்னாகரம், அக்.21: ஒகேனக்கல் அடுத்த மடம் கிராமத்தை சேர்ந்தவர் மாது மகன் சுரேஷ்(30). விவசாயி. நேற்று முன்தினம் இரவு சுரேஷ், அவரது வீட்டை பூட்டி விட்டு, அருகில் இருக்கும் அவரது மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் தூங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த போது, பீரோவில் இருந்த ₹10ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதேபோல், இவரது வீட்டின் அருகே உள்ள லட்சுமி, முனியப்பன், கவரம்மாள் ஆகியோரது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது தெரிந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து சுரேஷ், ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் ேபரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : robbery ,houses ,Okanagan ,
× RELATED 2 வீடுகளை உடைத்து நகை, கொள்ளை