×

தண்டையார்குளத்தில் நகரும் ரேஷன் கடை சேவை இன்பதுரை எம்எல்ஏ துவக்கிவைத்தார்

பணகுடி, அக். 21:  தண்டையார்குளத்தில் நகரும் ரேஷன் கடை சேவையை இன்பதுரை எம்.எல்.ஏ. துவக்கிவைத்தார். வள்ளியூர் ஒன்றியம், தண்டையார்குளத்தில் நகரும் ரேஷன்கடை சேவை துவக்க விழா  நடந்தது. தலைமை வகித்த இன்பதுரை எம்.எல்.ஏ. சேவையை துவக்கி வைத்தார்.  முன்னதாக அவருக்கு பெண்கள் உள்ளிட்ட கிராம மக்கள் ஊர் எல்லையில் திரண்டு வந்து உற்சாக  வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சிகளில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் வள்ளியூர் அழகானந்தம், ராதாபுரம் அந்தோனி அமலராஜா, நாங்குநேரி ராதாபுரம் தாலுகா வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் முருகேசன், பணகுடி மார்க்கெட் சொசைட்டி தலைவர் தங்கசாமி, துணைத்தலைவர் இளைய பெருமாள், சீனிவாசன், டிடி லாரன்ஸ், ஜெகன், ஜெயினுலாபுதீன், பொன் பாண்டி, ஐயப்பன், கோபாலகிருஷ்ணன்,வக்கீல் ராஜா, கருப்பசாமி,  கல்யாணசுந்தரம், அருண், சிவா, சுடலை கண்ணு, ராசையா,  ஆட்டோ மணி,  ரவி, நாராயணசாமி, ராஜலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Inbathurai MLA ,
× RELATED காவல்கிணறு சந்திப்பில் முதல்வர்...