×

நாங்குநேரியில் வறுமையால் தீக்குளித்த தொழிலாளி சாவு

நாங்குநேரி, அக். 21:    நாங்குநேரில் வறுமை யால் தீக்குளித்த தொழிலாளி இறந்தார். நாங்குநேரி முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் பாவநாசம் (80). இவரது 5வது மகனான பரமசிவன் (33) என்பவர் நாங்குநேரியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கால் வறுமைக்கு ஆளான பரமசிவம், மனமுடைந்து நேற்று மாலை வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதில் உடல் கருகிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து நாங்கு நேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Nanguneri ,
× RELATED மொபட் மோதி தொழிலாளி பலி