சிவகிரி, வாசுதேவநல்லூரில் அதிமுக ஆண்டு விழா

சிவகிரி, அக். 21:  சிவகிரி, வாசுதேவநல்லூரில் நடைபெற்ற அதிமுக 49வது ஆண்டு துவக்க விழாவில் மனோகரன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.  சிவகிரி பஸ் நிலையம் முன் அதிமுக 49வது ஆண்டு துவக்க விழா நடந்தது. இதற்குத் தலைமை வகித்த மனோகரன் எம்.எல்.ஏ., அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் சவுக்கை வெங்கடேசன், வாசுதேவநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் மூர்த்தி பாண்டியன், முன்னாள் தொகுதி செயலாளர் வக்கீல் துரைப்பாண்டியன்,  எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்கள் ராஜேந்திரன், ஆயில்ராஜா பாண்டியன், சின்னத்துரை, பேரூர் செயலாளர்கள் (வாசு.) சீமான் மணிகண்டன், (சிவகிரி) காசிராஜன், (ராயகிரி) சேவுகப்பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கம் பிச்சை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் மருதுபாண்டியன், ஜெ. பேரவை சிவகிரி நகரச் செயலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் ஆனந்தன், ஆசிரியர் ராமர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 இதே போல் வாசுதேவநல்லூர் பயணியர் விடுதி முன் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை செலுத்திய மனோகரன் எம்.எல்.ஏ., கட்சி கொடியேற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.  இதில் மாணவர் அணி முன்னாள் மாவட்டத் தலைவர் சசிகுமார், ஜெ. பேரவை ஒன்றியச் செயலாளர் சாமிவேல், விவசாய அணி மாவட்ட துணைச் செயலாளர் மாங்கனி முருகையா, நகர அவைத்தலைவர் நீராவி, பொருளாளர் திவான் மைதீன், ஜெ. பேரவை செயலாளர் முருகையா, இலக்கிய அணி எம்.ஆர். ராஜ், அரிசிக்கடை மாரியப்பன், களஞ்சியம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>