வாட்ஸ் அப்பில் ஆபாச படம் அனுப்பி நர்சுக்கு டார்ச்சர் 2 வாலிபர்களிடம் விசாரணை

குடியாத்தம், அக். 21: குடியாத்தம் அருகே தனியார் மருத்துவமனை நர்ஸ் செல்போனுக்கு ஆபாச படங்கள், எஸ்எம்எஸ் அனுப்பி டார்ச்சர் செய்ததாக 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரமாக இவரது செல்போனின் வாட்ஸ் அப் எண்ணுக்கு பல்வேறு எண்களில் இருந்து ஆபாசமான புகைப்படங்கள், ஆபாச எஸ்எம்எஸ்கள் வந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த இளம்பெண், ஆபாச படம் அனுப்பிய மர்ம நபருக்கு போன் செய்து எச்சரித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து அவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஆபாச படங்கள், எஸ்எம்எஸ்கள் வந்து கொண்டே இருந்தது. இதனால் மனவேதனை அடைந்தவர் குடியாத்தம் தாலுகா போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, சைபர் கிரைம் பிரிவுக்கு ஆபாச படம் அனுப்பியவர்களின் செல்போன் எண்களை அனுப்பி விசாரித்தனர். இதில், குடியாத்தம் அடுத்த பி.கே.புரத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் பல்வேறு எண்களில் இருந்து ஆபாச படம் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து 2 வாலிபர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>