×

மளிகை கடை கோவிலில் திருட்டு

தொண்டி, அக்.21:  தொண்டி அருகே மளிகை கடை மற்றும் கோவில் உண்டிலை உடைத்து திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொண்டி அருகே நகரிகாத்தான் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அமுதா என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அவர்கள் அரிசி மூட்டை உள்ளிட்ட பல ஆயிரம் ருபாய் மதிப்பிலான பொருள்களை திருடி சென்றுள்ளனர். மேலும் அருகில் உள்ள அய்யனார் கோவலில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்றுள்ளனர். அடுத்தடுத்து நடந்துள்ள திருட்டு இப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Theft ,grocery store temple ,
× RELATED மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது