×

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு போலீஸ் நிலையம் முற்றுகை

தொண்டி, அக்.21:  தொண்டி வட்டாணம் ரோட்டில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று ஏராளமானோர் போலீஸ் ஸ்டேசனில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொண்டி வட்டாணம் ரோட்டில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. ஆரம்ப சுகாதார நிலையம், முக்கியமான பஸ் ஸ்டாப், பள்ளி கூடங்களுக்கு செல்லும் வழி, குடி தண்ணீர் குளம் என பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள இடத்தில் இடையூறாக இக்கடை இயங்கி வந்தது. இதை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு கடை குறைப்பின் போது இக்கடை அடைக்கப்பட்டதால், பொது மக்கள் நிம்மதி அடைந்தனர். இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் கடை திறப்பதாக தகவல் பரவியது. இதனால் மீண்டும் பொதுமக்கள் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தொண்டி போலீஸ் ஸ்டேசனில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. நேற்று மீண்டும் கடையை திறக்க முயற்சித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த அனைத்து சமுதாய கூட்டத்தை கூட்டினர். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தில், கடையை திறக்க அனுமதிக்க கூடாது. மீறி திறந்தால் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் போலீஸ் ஸ்டேசன் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்ப்பட்டது. முடிவு குறித்து போலீசாரிடம் மனுவாக கொடுத்தனர். இதையடுத்து உயர்மட்ட அதிகாரிகளிடம் பேசப்பட்டது. இக்கடை திறப்பதை நிறுத்தி வைப்பது அல்லது வேறு இடத்தில் கடை திறப்பது என முடிவு செய்யப்பட்டதும் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : police station ,siege ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்