போலீஸ் அதிரடியில் சிக்கியவர்களுக்கு ‘பைன்’, சிக்காதவர்கள் ‘எஸ்கேப்’ உ.பி இளம்பெண் பாலியல் கொலையை கண்டித்து பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருச்சி, அக். 21: உபி இளம்பெண் பாலியல் கொலையை கண்டித்து திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். உத்தரபிரதேச மாநில இளம்பெண் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், அம்மாநில முதல்வர் யோகியின் ஆட்சியை நீக்க கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் நேற்று திருச்சி தில்லைநகர் கே.டி ஜங்ஷன் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் காளியப்பன் தலைமை வகித்தார். இதில் 30க்கும் ேமற்பட்டோர் உ.பி. அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

பின்னர் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Related Stories: