×

ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல் ஊராட்சி ஒன்றியங்களுக்கு பொது நிதியை குறைத்து கொடுத்ததால் நெருக்கடி

வலங்கைமான், அக்.21: தமிழ்நாட்டில் 385 ஊராட்சி ஒன்றியங்களும், அவற்றில் 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகளும் உள்ளன. கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதிக்கு பின்னர் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாதபோது தனி அலுவலரின் கட்டுபாட்டில் ஊராட்சிகள் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தலை நடத்த போதிய ஆர்வம் காட்டவில்லை. எதிர்கட்சிகளின் தொடர் கோரிக்கை வைத்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிற்கு தேர்தல் நடத்தாமல் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் கடந்த டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்தியது. அதனையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற உள்ளாட்சிப்பிரதிகள் பதவியேற்று கொண்டனர்.

கொரோனா தொற்று பரவலினை தடுக்கும் விதமாக தொடர் ஊரடங்கு அமலில் இருந்ததால் போதிய வருவாய் அரசுக்கு வரவில்லை. அதனையடுத்து 2020-21 ம் நிதி ஆண்டின் தொடக்க மாதமான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என 6 மாதங்கள் ஊராட்சி ஒன்றியங்களுக்கு பொது நிதி வழங்கப்படவில்லை. உள்ளாட்சி தேர்தழுக்கு பிறகு ஊரக ஊராட்சிகள் மறுமலர்ச்சி பெறும் என எதிர்பார்த்த நிலையில் உள்ளாட்சி தேர்தழுக்கு பிறகும் ஊரக ஊராட்சி ஒன்றியங்களுக்கு போதிய நிதி வழங்கபடாததால் சாலைபணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள், குடிநீர் வினியோகம் தொடர்பான கட்டுமான பணிகள், ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகள் கட்டுதல் மற்றும் பராமரித்தல், மத்திய மாநில அரசின் கிராமப்புறத் திட்டங்களை நிறைவேற்றுவது போன்ற அடிப்படை பணிகளை கூட நிறைவேற்ற முடியாத நிலை தொடர்கிறது.

தமிழகத்தில் கடந்த 6 மாதமாக ஊராட்சி ஒன்றியங்களுக்கு பொது நிதி தமிழகஅரசால் வழங்கப்படாத நிலையில் இரண்டு மாதங்களுக்கான பொது நிதியாக விரைவில் ரூபாய் நாற்பது லட்சத்துக்குமேல் வரும் என ஊரக வளர்ச்சித்துறையினர் கூறிவந்தனர். இந்நிலையில் இம்மாத முதல் வாரத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு பொது நிதி மிக குறைவாக சுமார் 6 லட்சம் வரை மட்டுமே வந்தது. ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இந்த நிதி ஆண்டின் தொடக்கத்திலிருந்து பொதுநிதி வழங்கபடாத நிலையில் 2 மாத பொதுநிதியாக அள்ளிக் கொடுப்பார்கள் என கருதிய நிலையில் பொதுநிதியை கிள்ளிகொடுத்ததால் கடும் நிதி நெருக்கடி தொடர்கின்றது.

Tags : Crisis ,teachers union ,
× RELATED குஜராத்தில் பாஜகவுக்கு நெருக்கடி!:...