வங்கிகளுக்கு நிதி மூலதனத்தை இந்திய கோயில்கள் வழங்கின முதன்மை பொருளாதார ஆலோசகர் பேச்சு

தஞ்சை, அக். 21: தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை சார்பில் CUB நாராயணன் நினைவு சொற்பொழிவு நடந்தது. இதில் உலக பொருளாதார வரலாறு மற்றும் இந்தியாவின் எதிர்காலம் என்ற தலைப்பில் மத்திய நிதி அமைச்சக முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் பேசுகையில், இறை வழிபாடு மற்றும் கலாசாரத்தில் இருப்பிடமாக இருந்த இந்திய கோயில்கள், வங்கிகளுக்கு நிதி மூலதனத்தை வழங்கின. இந்த மூலதனத்தை கொண்டு வங்கிகள் ஆரம்ப நூற்றாண்டுகளின் கார்ப்பரேட் கில்டுகளுக்கு நிதியுதவி அளித்தன என்றார்.

மேலும் அவர், மத மற்றும் பொருளாதார மூலதனத்தின் இடங்களாக சோழர் கோயில்கள் மற்றும் பூரி ஜெகநாத கோயிலை உதாரணங்களாகும். பொருளாதாரத்தின் வரலாறு கணிக்க முடியாத திருப்பங்கள் நிறைந்தது. சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுத்தவர்கள் மட்டுமே தலைவர்களாக வெளிப்பட்டனர் என்றார். மேலும் அவர் பேசுகையில், கோவிட்டை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தெரிய துவங்கியுள்ளது. ஆத்ம நிர்பர் கொள்கை கடந்த காலத்தின் காலாவதியால் ரெஜிமெண்டை விடுத்து இந்தியாவின் சுதேசமாக இயங்கும் தன்னம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றார்.சாஸ்த்ரா துணைவேந்தர் வைத்தியசுப்பிரமணியன் பேசுகையில், சிட்டி யூனியன் வங்கியின் மிக நீண்ட கால தலைவராக இருந்த வி.நாராயணன், இந்தியாவின் வங்கி நிலப்பரப்பில் தஞ்சை மாவட்டத்தை தனித்துவமாக நிலைநிறுத்துவதில் மேற்கொண்ட முயற்சிகளை நினைவு கூர்ந்தார். சிட்டி யூனியன் வங்கி எம்டி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் காமகோடி நன்றி கூறினார்.

Related Stories:

>