×

அண்ணா பல்கலைக்கழக

கும்பகோணம், அக். 21: கும்பகோணம் அருகே சொத்து தகராறில் வக்கீல் உட்பட 2 பேரை கொலை செய்த வழக்கில் உறவினர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணம் அருகே சொத்து தகராறில் வழக்கறிஞரும், அவரது நண்பரும் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே குப்பாங்குளம் கிளாரட் பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (40). வக்கீலான இவர் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தஞ்சை கிழக்கு வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில் கிளாரட் பகுதியில் ஒரே பைக்கில் காமராஜ், அவரது நண்பரான அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் சக்திவேல் (35) ஆகியோர் வந்தனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே காமராஜ், சக்திவேல் ஆகியோர் இறந்தனர். பின்னர் 6 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றது.

தகவல் அறிந்ததும் நாச்சியார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது கொலையாளிகளை உடனடியாக கைது செய்யகோரி கும்பகோணம் அரசு மருத்துவமனை முன் நேற்று முன்தினம் நள்ளிரவு காமராஜ், சக்திவேலின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் 2 பேரின் உடலும் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில் கும்பகோணத்தில் திருச்சி மத்திய மண்டல ஐஜி ஜெயராமன், தஞ்சை எஸ்பி தேஸ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் முகாமிட்டு போலீஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தினர்.

பின்னர் நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், காமராஜிக்கும் அதே பகுதியை சேர்ந்த உறவினரான பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயலாளர் ராஜவேலு என்பவருக்கும் சொத்தை பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்த சொத்து தொடர்பாக கடந்த 15 நாட்களுக்கு முன் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணையின்போது இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டதில் ராஜவேலுவின் கைவிரலை காமராஜ் கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் ராஜவேலு மகன் ஆனந்த் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்த காமராஜ் மற்றும் சக்திவேலை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இரட்டை கொலை வழக்கு தொடர்பாக ராஜவேலு மகன் ஆனந்த் (33), அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் கண்ணன் (எ) ராஜசேகர் (45), கணேசன் மகன் சசிகுமார் (41), சின்னதம்பி மகன் சம்பத் (22) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக வக்கீல் காமராஜை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்யகோரி கும்பகோணம் கோர்ட் முன் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Tags : Anna University ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...