×

தலைவருக்கு தெரிவிப்பதுபோல் துணை தலைவருக்கும் தகவல்களை தெரிவிக்க வேண்டும்

பெரம்பலூர்,அக்.21:அனைத்து தகவல்களையும் தலைவருக்கு தெரிவிப்பதுபோல் துணைத் தலைவருக்கும் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். வேப்பந்தட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி துணைத் தலைவர்கள் கூட்டமைப்புக் கூட்டத் தில் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளின் துணைத் தலைவர் கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் வேப்பந்த ட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாள ரான வி.களத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சபியுல்லா தலைமை வகித்தார்.

பசும்பலூர் ஊராட்சி துணைத் தலைவர் மணி கண்டன், வாலிகண்டபுரம் ஊராட்சி துணைத் தலை வர் பவானி ரெங்கராஜ், வெங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாயகிருஷ்ணன், அன்னமங்கலம் ஊராட்சி துணைத் தலைவர் அனுசியா மேரி, நூத்தப்பூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கார்த்திகா சீனிவாசன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளின் துணைத் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அனைத்து ஊ ராட்சிகளிலும் துணைத் தலைவருக்கான அங்கீகாரம் மற்றும் அதிகாரத்தின் உண்மைத் தன்மையை அங்கு பணியாற்றும் செயலாளர் மற்றும் பணியாளர் களுக்கும் அறிவுறுத்தித் துணைத்தலைவரை மதிக்கும் எண்ணத்தை உருவாக்க வேண்டும். துணைத் தலைவர் கையொப்பமிட வழங்கப் பட்ட மின்சாதன பெண் டிரைவ் உடனே சம்பந்தப்பட்ட அனைத்து துணை தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஊராட்சியில் நடக்கும், நடைபெற இருக்கும் நலத் திட்டங்களை, நகல்களை ஊராட்சி தலைவருக்கு அனுப்புவதுபோல் துணை த்தலைவருக்கும் அனுப்ப வேண்டும்.

அனைத்து தகவல்களையும் ஊராட்சி தலைவருக்கு தெரிவிப்பது போன்று துணைத் தலைவ ருக்கும்எங்களது முகவரிக் குக் கடிதம்மூலம் தெரிவிக் க வேண்டும்.ஊராட்சி பணி களையும் சரிபார்க்க வரும் அனைத்து அலுவலர்களும் தலைவருக்கு தகவல் தரு வது துணைத் தலைவருக் கும் தகவல் தர வேண்டும். ஊராட்சிப் பணிகளுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் போது பர்சேஸ் ஆர்டர், பேமெண்ட் வவுச்சர் ஆகியவைகளில் எங்களு டைய கையொப்பம் இடம் பெறவேண்டும் எனத் தீர் மானங்கள் நிறைவேற்றி னர். கூட்டத்தின் முடிவில் தீர்மான நகலை வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) அறிவழகனிடம் கொடுத்தனர்.

Tags : Vice President ,
× RELATED துணை ஜனாதிபதி தமிழகம் வருகை