×

ஊராட்சி துணை தலைவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல் ஆண்டிமடத்தில் நாடகம் நடத்தி கொரோனா விழிப்புணர்வு

ஜெயங்கொண்டம், அக்.21: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல்துறை மற்றும், ஆண்டிமடம் வணிகர்கள் நல சங்கம், அரிமா சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் டிஎஸ்பி தேவராஜ் தலைமை வகித்தார். அரிமா சங்க தலைவர் ராஜேந்திரன், வணிகர்கள் நல சங்க தலைவர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் திருவண்ணாமலை முத்தமிழ் கலை மன்றத்தினர் கொரோனா வைரஸ், எமதர்மன், சித்திரகுப்தன், வள்ளலார் போன்று வேடமணிந்து கொரோனா வைரஸை எதிர்கொள்வது, பெண் கல்வி முன்னேற்றம், சிறார் திருமண தடுப்பு, போதைப்பொருளுக்கு அடிமையாவது அதிலிருந்து விடுபடுவதற்கான வழி முறைகள் மற்றும் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது அவசியம் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து போன்ற கருத்துக்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு முககவசம், எதிர்ப்பு சக்தி தரக்கூடிய மாத்திரை வழங்கப்பட்டது. மேலும் இந்த பிரசாரத்தில் அகன்ற திரை மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோ காட்சிகளை ஒளிபரப்பினர். முன்னதாக ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வணிகர்கள் நல சங்க செயலாளர் சின்னப்ராஜ், பொருளாளர் சாமிநாதன், அரிமா சங்க பொருளாளர் ரமேஷ் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள், போலீசார், கலந்து கொண்டனர். முடிவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் நன்றி கூறினார்.

Tags : Confederation ,Panchayat Vice Presidents ,Andimadam ,
× RELATED அரியலூர் அருகே போட்டோவில் இருந்த தாலியை திருடியவர் கைது