×

நாகையில் கஞ்சா விற்ற முதியவர் கைது

நாகை,அக்.21: நாகையில் கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர். நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வெளிப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் சந்தேகத்தின் பேரில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த பசுபதி (60) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags : Naga ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது