கிராமப்புறங்களில் கொசுமருந்து அடிக்க வேண்டும்

நாகை, அக்.21: கிராமப்புறங்களில் கொசுக்களை ஒழிப்பதற்கு கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று கீழையூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நாகை அருகே கீழையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாக குழு கூட்டம் நடந்தது. நிர்வாக குழு உறுப்பினர் ராமலிங்கம் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் செல்வம் பேசினார். நாளை (21ம் தேதி) கீழையூர் ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட உள்ள கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்கும் விழாவில் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொள்வது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஏற்கனவே கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள சமுதாயக் கூடங்கள் மற்றும் புயல் பாதுகாப்பு கட்டிடங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை மாவட்ட நிர்வாகம் சீர் செய்ய வேண்டும். உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் கிராமப்புறங்களில் கொசுத்தொல்லை தற்பொழுது அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவாமல் தடுக்க ஆரம்ப நிலையிலேயே கிராமங்களில் கொசுபுழுவினை ஒழிப்பதற்கு கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டக்குழு உறுப்பினர்கள் நாகராஜன், கண்ணையன், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>