×

இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் குழி

திருப்பூர், அக்.21: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே சாலையில்  ஏற்பட்ட திடீர் குழியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர், கொங்கு மெயின் ரோடு பிரதான சாலைகளில் ஒன்றாக உள்ளது. இந்த வழியாக வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். மேலும், கொங்கு மெயின் ரோட்டில் ஏராளமான குடியிருப்புகள், மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்ளது. இந்நிலையில், நேற்று பகல் 12 மணியளவில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே சாலையில் திடீரென பெரிய குழி ஏற்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் குழி இருக்கும் பகுதியை சுற்றி தடுப்பு வைத்து மறைத்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
பின்னலாடை நிறுவனங்களுக்கு துணிகளை ஏற்றிச்செல்ல தினமும் லாரிகள், வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் இந்த வழியாக செல்லும். கடந்த சில நாட்களுக்கு முன்பு இ.எஸ்.ஐ. மருத்துவமனை பகுதியில் மாநகராட்சி சார்பில் சாைலயோரம் குழி தோண்டப்பட்டது. அந்த குழி நீண்ட நாட்களுக்கு பின் முடப்பட்டது. இந்நிலையில், நேற்று ஏற்பட்ட குழியால் இந்த பகுதியில் கனரக வாகனங்கள் ஏதுவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழியை மூட மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : ESI ,road ,hospital ,
× RELATED பழுதடைந்த சாலையால் அவதி