×

அண்ணா பல்கலை. துணைவேந்தரை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.21: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெற்கு மாநகர செயலாளர் ஜெயபால் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அண்ணா பல்கலைக்கழகத்தை சீர்குலைக்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மருத்துவ கல்லூரி இட ஒதுக்கீடு சட்டத்திற்கு தமிழக ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Anna University ,Demonstration ,removal ,deputy ,
× RELATED அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்...