×

மாரடைப்பால் போலீஸ்காரர் சாவு

பந்தலூர், அக். 21: பந்தலூர் அருகே எருமாடு போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவில் பணிபுரிந்த போலீஸ்காரர் மாரடைப்பால் இறந்தார். பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்தவர் முரளி (44).  இவர் எருமாடு போலீஸ் ஸ்டேஷனில் தனிப்பிரிவு  போலீஸ்காரராக பணிப்புரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் பணியிலிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கேரளா மாநிலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முரளி வரும் வழியிலேயே இறந்ததாக தெரிவித்தனர்.  போலீஸ்காரர் முரளிக்கு சங்கீதா என்ற மனைவியும், சச்சீந்திரன் (12), கீர்த்திவர்ஷா (9)என்ற மகன், மகள் உள்ளனர்.

Tags : Policeman ,
× RELATED கும்பல் தாக்குதலை சமாளிக்க...