×

ரோட்டோரம் கொட்டப்படும் வெங்காய கழிவுகளால் துர்நாற்றம்

பொள்ளாச்சி, அக்.21:  பொள்ளாச்சி காந்தி தினசரி மார்க்கெட்டுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறிகள் சிலநேரத்தில் விற்பனையாகாமல் தேக்கமடையும்போது, அதனை ஆங்காங்கே கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதில், காந்தி மார்க்கெட்டின் ஒரு பகுதியில் உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து உள்ளது. அதனை தரம் பிரித்து விற்பனைக்காக அனுப்பி வைக்கும்போது, அதில் உள்ள கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவது இன்னும் தொடர்கிறது.  அதிலும், மார்க்கெட்டின் வெளியே ரோட்டோரம் மூட்டையாக அழுகிய வெங்காயத்தை கொட்டப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சிலநேரத்தில் நாய்கள், அந்த மூட்டைகளை இழுத்து ரோட்டில் சிதறி போடுவதால் அந்த வழியாக செல்வோர் அவதிப்படுகின்றனர். எனவே, ரோட்டோரம் வெங்காயம் உள்ளிட்ட காய்கறி கழிவுகளை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...