வால்பாறையில் படகு இல்ல பணிகள் தீவிரம்

வால்பாறை, அக்.21: வால்பாறை ஸ்டேன்மோர் சாலையில் 4.2 ஏக்கர் பரப்பில், 3.47 கோடி மதிப்பீட்டில் படகு இல்ல பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது தடுப்பணை அமைக்கும் பணிகள் நடக்கிறது. தடுப்பணையை சுற்றிலும் நடைபாதை அமைக்கவும் நகராட்சி திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் வரும் ஜனவரி மாதத்திற்குள் முடிக்க சமீபத்தில் வால்பாறை பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, வால்பாறை நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தற்போது இப்பணிகள் மேலும் தீவிரம் அடைந்து உள்ளது.

Related Stories:

>