×

தற்காலிக சுவர் எழுப்பி நடைபாதை மூடல்

ஊட்டி,அக்.20: ஊட்டியில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்படுத்தி வந்த நடைபாதையை நகராட்சி நிர்வாகம் சுவர் எழுப்பி மூடியதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊட்டி நகராட்சி அலுவலகத்திற்கு செல்ல இரு பாதைகள் உள்ளன. ஒன்று மருத்துவமனை சாலையில் இருந்து செல்லும் சாலை பிரதான சாலையில் உள்ளது. மற்றொன்று மார்க்கெட்டில் இருந்து அரசு பள்ளி வழியாக செல்லும் நடைபாதையாக உள்ளது. நகராட்சி வரும் 90 சதவீதம் மக்கள் மார்க்கெட்டில் இருந்து நகராட்சிக்கு செல்லும் நடைபாதையையே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். 36 வார்டுகளுக்குட்பட்ட மக்கள் பஸ்கள் மூலம் ஏடிசி., பகுதிக்கு வந்து, அங்கிருந்து மார்க்கெட் வழியாக நகராட்சி அலுவலகத்திற்கு செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி, நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் இருந்து ஊட்டி அரசு ேமல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் கடந்த 50 ஆண்டுக்கு மேலாக இந்த நடைபாதையை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் திடீெரன தடுப்பு அமைத்து பாதையை மூடிவிட்டது. இதனால், பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடைபாதையை அடைத்தது தெரியாமல் பெரும்பாலான மக்கள் அலுவலகம் வரை சென்று ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். குறிப்பாக, வயதானவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் ெபண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடைபாதையில் மாலை 6 மணிக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என நகராட்சி நிர்வாகம் அறிவித்தால் போதுமானது. அதை விடுத்து நடைபாதையை மூடியது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் கவுன்சிலர் ஜார்ஜ் கூறுகையில், பொதுமக்கள், தூய்ைம பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்திய இந்த நடைபாைதயை மீண்டும் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : closure ,
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...