×

கடலூர் மாவட்டத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா தொற்று பலி எண்ணிக்கை 263 ஆனது

கடலூர், அக். 20: கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிப்பின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 586 ஆனது. கடலூர் நகரில் 2 பேர் இறந்ததை தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 263 ஆனது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   நேற்று 86 பேருக்கு நோய் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22,586 ஆனது. நேற்று 95 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில்இதுவரையில் 21 ஆயிரத்து 331 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 893 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

99பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 67 ஆயிரத்து 207 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு காரணமாக மாவட்டத்தில் 38 இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பில் ஒரு டாக்டர் , 2 கர்ப்பிணி மற்றும் ஏற்கனவே நோய்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 59 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 985 பேர் பரிசோதனை காத்திருப்பில் உள்ளது. நேற்று நோய்த் தொற்றில் கடலூரைச் சேர்ந்த 97 வயது உடைய ஆண் மற்றும் 60 வயதுடைய பெண் என இரண்டு பேர் இறந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 263 ஆனது..

Tags : Cuddalore district ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...