முக்கூடல் அருகே வீடு பராமரிப்பின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

பாப்பாக்குடி, அக்.20:  முக்கூடல் அருகே வீடு பழுது பார்க்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார். ஒருவர் படுகாயடைந்தார்.

முக்கூடல் அருகேயுள்ள கலியன்குளம் காந்தியார் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது வீட்டு அருகே மற்றொரு அறை கட்ட முடிவு செய்தார். இதற்காக அப்பகுதியை சேர்ந்த சில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். பழைய வீட்டில் உள்ள மேற்கூரையை அகற்றும் போது, கூரையுடன் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் நின்றிருந்த தொழிலாளி அதே ஊரைச் சேர்ந்த மணியப்பன் மகன் ஜெயபிரகாஷ்(20), கசமுத்து மகன் பூ பாலகன்(40) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் மீட்கப்பட்டு முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியில் ஜெயபிரகாஷ் உயிரிழந்தார். பூ பாலகன் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து முக்கூடல் காவல் ஆய்வாளர் குமாரி சித்ரா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: