×

கொத்தன்குளம் கிராமத்தில் நகரும் ரேஷன் கடை இன்பதுரை எம்எல்ஏ துவக்கி வைத்தார்

பணகுடி, அக்.20: ராதாபுரம் தொகுதி கொத்தன்குளம் கிராமத்தில் நகரும் ரேஷன் கடை தொடக்க விழா நடந்தது. இன்பதுரை எம்எல்ஏ தலைமை வகித்து பொருட்கள் வழங்கி ரேஷன் கடையை துவக்கி வைத்து பேசுகையில், ‘ராதாபுரம் தொகுதியில் மட்டும் தற்போது 15 நகரும் நியாய விலைக்கடைகள் துவங்குவதற்கான அனுமதியை அரசிடம் பெற்றிருப்பதாகவும், எஞ்சிய பகுதிகளுக்கு விரைவில் கடைகள் திறக்க அரசிடம் அனுமதி பெற்றுதரப்படும்’ என உறுதியளித்தார். நிகழ்ச்சியில் வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம், நாங்குநேரி ராதாபுரம் வேளாண்மை விற்பனை சங்க தலைவர் முருகேசன், கூட்டுறவு சங்க செயலாளர் பெஸி, இருக்கன்துறை கூட்டுறவு சங்கத்தலைவர் சவுந்தரபாண்டி, பணகுடி நிலவள வங்கி துணை தலைவர் கைலாசம், அதிமுக நிர்வாகிகள் சுடலைமணி, விவேக், இக்னேஷியஸ், ராஜாமணி, இசக்கியப்பன், பாலமுருகன், ஐயாத்துரை, செல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 முன்னதாக கிராம மக்கள், இன்பதுரை எம்எல்ஏவிடம், ‘கடந்த ஆண்டு எங்கள் பகுதியில் அமைக்கப்பட்ட சாலை வழியாக இரவு, பகலாக அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் தற்போது சாலை பழுதாகி குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. எனவே, இரவு நேரங்களில் இந்த சாலை மார்க்கமாக வருகிற ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றிச்
செல்லும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டுக் கொண்டனர். இது குறித்து கலெக்டரிடம் கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்பதுரை எம்எல்ஏ உறுதியளித்தார்.

Tags : Inbathurai MLA ,village ,
× RELATED காவல்கிணறு சந்திப்பில் முதல்வர்...