×

அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

உடன்குடி, அக். 20: தண்டுபத்தில் தெற்கு  மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலையில்  மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்தனர்.  தூத்துக்குடி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த பாஜ  மயில்வாகனன், அதிமுக சந்திரன், பேச்சிமுத்து, பாலகிருஷ்ணன், மாடசாமி,  கார்த்திக், முருகபெருமாள், சிவா, பிச்சையா, மூக்கன்பெருமாள், அருண்,  சுதாகர் உள்ளிட்ட மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி உடன்குடி அடுத்த தண்டுபத்தில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. முன்னிலையில்  திமுகவில் இணைந்தனர். அப்போது தூத்துக்குடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்  புதூர் சுப்பிரமணியன், மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், தொண்டர் அணி  மாவட்ட அமைப்பாளர் வீரபாகு, தொண்டர் அணி துணைஅமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றியப் பிரதிநிதி  வாகை கணேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.      

Tags : Alternative parties ,DMK ,Anita Radhakrishnan MLA ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி