×

சேத்துப்பட்டு அருகே போலி மதுபானம் விற்ற 3 பேர் கைது

சேத்துப்பட்டு, அக்.20: சேத்துப்பட்டு அருகே போலி மதுபானங்களை பதுக்கி விற்ற 3பேரை போலீசார் கைது செய்தனர். சேத்துப்பட்டு பகுதியில் போலி மதுபானம் அதிகளவு விற்பதாக எஸ்பி அரவிந்துக்கு புகார் வந்தது. அவரது உத்தரவின்பேரில் கலால் டிஎஸ்பி பழனி தலைமையில் திருவண்ணாமலை கலால் இன்ஸ்பெக்டர் தயாளன், போளூர் கலால் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் போலி மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற சேத்துப்பட்டு- வந்தவாசி சாலையில் உள்ள ஜெகநாதபுரம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்(39), மேல்மலையனூர் தாலுகா கொடுங்குப்பம் கிராமத்தை சேர்ந்த குமார்(36), அனாதிமங்கலத்தை சேர்ந்த வேலு(34) ஆகிய 3 பேரை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 762 போலி மதுபாட்டில்கள், 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு போலி மதுபானங்கள் தயாரித்து கொடுத்தவர்கள் யார்? எந்தெந்த பகுதிகளில் போலி மதுபாட்டில்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chetput ,
× RELATED சேத்துப்பட்டில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை