×

சிவகாசியில் குடிநீர் பணிக்கு தோண்டிய குழிகளால் சாலைகள் சேதம் வாகன ஓட்டிகள் அவதி


சிவகாசி, அக்.20:  சிவகாசி நகரில் பல இடங்களில் தாமிரபரணி குடிநீர் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட  குழிகளால் சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. சிவகாசி நகராட்சி பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிரந்தரமாக போக்க ரூ.170 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் பழவூர் தாமிரபரணி ஆற்றில் போர்வெல் கிணறுகள் அமைத்து புளியங்குடி, சங்கரன்கோவில், சிவகாசி, திருத்தங்கல் நகராட்சிகளுக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இந்த திட்டத்தில் சிவகாசி நகராட்சி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. இப்பணிக்காக குழிகள் தோண்டப்பட்டதால் சாலைகள் பல இடங்களில் கவும் மோசமாக சேதமடைந்து கிடக்கிறது. மணிநகர், ஞானகிரி ரோடு, பிஎஸ்ஆர்.ரோடு, வேலாயுத ரஸ்தா சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Roads ,Sivakasi ,
× RELATED ஓட்டுப்பதிவு இயந்திரம்...