×

போடி நகராட்சிக்கு புதிய கமிஷனர்

போடி, அக்.20: தினகரன் செய்தி எதிரொலியாக போடி நகராட்சிக்கு புதிய கமிஷனர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். போடி நகராட்சி கமிஷனராக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி பணிமாறுதல் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு சென்றுவிட்டார். மூன்று மாதமாக பணியிடம் காலியாக இருந்தது. நகராட்சி பொறியாளர் குணசேகரன் பொறுப்பு கமிஷனராக இருந்து வந்தார். இதனால் நகராட்சி பணிகள் பாதிக்கப்பட்டது. எனவே புதிய கமிஷனர் நியமிக்க வேண்டும் என்று தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக  சென்னை தலைமை செயலகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணியாற்றிய ஷகிலா போடி நகராட்சி கமிஷனராக நேற்று பொறுப்பேற்றார். புதிய கமிஷனர் ஷகிலாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம், போடி அருகே உள்ள பண்ணைப்புரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Commissioner ,Bodi Municipality ,
× RELATED சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பணி...