×

பாதாளசாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் எம்எல்ஏ வலியுறுத்தல்

காரைக்குடி, அக்.20:  காரைக்குடி எம்எல்ஏ அலுவலகத்தில் பாதாளசாக்கடை திட்ட பணிகள் குறித்து நகராட்சி, நெடுஞ்சாலை துறை, தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம், திட்ட ஒப்பந்தகாரர்கள் ஆகியோருடன் கேஆர்.ராமசாமி எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார். இதில் பாதாள சாக்கடை திட்ட பணியின் தாமதத்திற்கு காரணம். பொதுமக்கள் வியாபாரிகள் சிரமப்படுவதால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பணிகள் முடிந்த பகுதிகளில் உடனடியாக சாலை அமைக்க வேண்டும். பழமையான சிமென்ட் சாலையை சேதப்படுத்தாமல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என எம்எல்ஏ தெரிவித்தார்.

தேவகோட்டை பகுதியில் திருப்பத்தூர் சாலையை புதுப்பித்து தர வேண்டும் என உயர்அதிகாரிகளிடம் தெரிவித்தார். வ.உ.சி சாலை ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட்டு விடும். செக்காலை சாலையில் பாதாளசாக்கடை திட்ட பணிகள் ஒரு வாரத்திற்குள் முடிந்தவுடன் அதன் பின்பு அச்சாலையில் பேட்ஜ் ஒர்க் செய்து தரப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். கூட்டத்தில் சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் மாங்குடி, நகரத்தலைவர் பாண்டிமெய்யப்பன், புஷ்பராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : MLA ,
× RELATED திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைவு...