×

திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்

சிவகங்கை, அக்.20: திருப்புவனம் அருகே அல்லிநகரம், பூவந்தி, டி.புளியங்குளம் கிராமங்களில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் இணைய வழி புதிய உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் அடையாள அட்டையை வழங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், ஈஸ்வரன், ஒன்றிய கவுன்சிலர் மூர்த்தி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் தேவதாஸ், அறிவுக்கரசு, மடப்புரம் மகேந்திரன், மீனவரணி அண்ணாமலை, தகவல் தொழில் நுட்ப அணி ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் காமராஜர் காலனியில் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் நடந்த  இணைய வழி திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன் அடையாள அட்டைகளை வழங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தூஷாந்த் பிரதீப்குமார், கிளை செயலாளர் ஜான்பாண்டியன், அவைத்தலைவர் மாயாண்டி, இணையத்தள ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,Admission Camp ,
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே திமுக பொது உறுப்பினர் கூட்டம்