×

பசும்பொன் குருபூஜைக்காக தென்மண்டல ஐஜி ஆலோசனை

சாயல்குடி, அக்.20: கமுதி அருகே பசும்பொன் கிராமத்திலுள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு முக்கிய தலைவர்கள் வருவதால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கமுதியில் நேற்று ஐஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் ஆண்டுதோறும் அக்.28, 29 மற்றும் 30ல் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் 28ம் தேதி ஆன்மீக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கும், இரண்டாம் நாள் வழக்கமான பூஜைகள், அரசியல் விழா நடக்கும், மூன்றாம் நாள் குருபூஜையும், அரசு  விழாவும் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக வழக்கமான கொண்டாட்டங்கள், வெளிமாவட்டம், வெளி பகுதியிலிருந்து பொதுமக்கள் வந்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அக்.30ம் தேதி தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, அவருடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அல்லது இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து கமுதி ஆயுதப்படை கூட்டரங்கில் காவல்துறை ஆலோனை கூட்டம் தென்மண்டல ஐஜி முருகன் தலைமையில் நடந்தது, இதில் ராமநாதபுரம் டிஐஜி மயில்வாகணன், எஸ்.பி கார்த்திக், கமுதி டி.எஸ்.பி பிரசன்னா உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Blonde Gurupuja ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது