×

நோய் பாதித்த நாய்களால் அச்சம்

கீழக்கரை, அக்.20:  கீழக்கரை பகுதியில் நோய் பாதித்த நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இவைகளை பிடித்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை பகுதி மாயாகுளம் மங்கேள்ஸ்வரி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. இதில் சில வெறி நாய்களும் உள்ளன. சில நாய்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு அச்சமூட்டும் வகையில் திரிகிறது. இதனால் சாலையில் செல்லும் சிறுவர் சிறுமிகள் உள்ளிட்ட பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெளியே வருபவர்களின் பைகளை இழுத்தும், சீருடைகளை கிழித்தும் விடுகின்றன.

இதனால் சிறு பிள்ளைகள் நாய்களிடமிருந்து தப்பித்தால் போதும் என ஓடும் நிலை உள்ளது.கீழக்கரையில் கடந்த சில ஆண்டுகளாக நூற்றுக்கணக்கானோர் நாய் கடியால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள். இது குறித்து காதர் கூறியதாவது, நகரில் இரவு, பகலாக ஊரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் நாய் பயம் இல்லாமல் நடமாட முடியவில்லை. ஆகையினால் உயிர்சேதம், பொருள் சேதம் போன்ற விபரீதம் ஏதும் நடைபெறும் முன்னர் இந்த நாய்களை ஒழித்து பொதுமக்கள் அச்சமின்றி தெருக்களில் நடமாட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு