×

மின்னணு சாதனங்களை பயன்படுத்தினால் ஆபத்து

தொண்டி, அக்.20:  இடி, மின்னலின் போது வெட்ட வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவேண்டும். குழந்தைகள் வீடுகளில் உள்ளனரா என்பதையும் வளர்ப்பு பிராணிகள் கொட்டிலில் உள்ளனவா என்பதை உறுதி செய்யவேண்டும். வீட்டிலுள்ள மின் மற்றும் மின்னணு சாதனங்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளனவா என உறுதி செய்தல் வேண்டும். இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ மரத்தடியிலோ உயர்மின் கோபுரங்கள் மற்றும் இரும்பு வேலிகளின் அருகில் நிற்பதோ தங்குவதோ கூடாது. கால்நடைகளை மரத்தில் கட்டுவதையோ, வெளியில் மேய்ச்சலுக்கு விடுவதையோ தவிர்க்க வேண்டும்.

மின்னணு சாதனங்களை அறவே பயன்படுத்துதல் கூடாது. மேற்கூரை வேயப்பட்ட கட்டிடங்களின் கீழ் ஒதுங்க வேண்டும். மிக உயரமான பகுதிகளில் உள்ள கட்டிடங்களின் கீழ் தங்குவதை தவிர்க்க வேண்டும். ஆறுகள், குளங்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். இரும்பு கொடிகம்பம், டிவி ஆண்டனா, செங்குத்தான உலோகங்களினாலான சாதனங்களின் அருகில் நிற்கக் கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உலோகத்தினாலான குடை மற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளை கையாண்டு மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு மற்றும் உடமைகளுக்கு ஏற்படக்கூடிய சேதங்களை தவிர்க்க வேண்டும்.

Tags :
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு