×

திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு


திருச்சி, அக்.20: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கொரானாவால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாறாக மக்களிடமிருந்து மனுக்களுக்கு மட்டும் பெட்டி வைத்தும் மற்றும் வாட்ஸ்அப் மூலமும் பெறப்படுகிறது. அந்த
வகையில் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் நேற்று வாட்ஸ்அப் மூலம் வந்தது. தவிர மனுப்பெட்டியிலும் மக்கள் மனு அளித்தனர். திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் புதியவன் அளித்த மனுவில், ‘அடிமைச் சங்கிலியை உடைத்து சமூகநீதியை நிலைநாட்டிய தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் ஆகியோரது சிலைகளை கூண்டுக்கம்பிக்குள் அடைத்து வைத்துள்ள அவர்களை போற்றும் அதிமுக அரசு, அதை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பாமக மாவட்ட செயலாளர் திலீப்குமார் அளித்த மனுவில், ‘திருச்சி மாநகர போலீசார் நாள்ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இலக்கு வைத்து, ஆட்டோ, கார், டூவீலர்களை நிறுத்தி, பயணிகளை இறக்கிவிட்டும் வழக்குப்பதிவு செய்கின்றனர். மக்கள் கொரோனா பாதிப்பிலிருந்து மீளாத நிலையில் இதுபோன்ற வழக்குகள் தேவையற்றது. இதை தவிர்க்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். கம்பரசம்பேட்டை மல்லாச்சிபுரத்தில் சிறிய சுரங்கப் பாதை அமைத்து பள்ளி வாகனம், ஆம்புலன்ஸ் செல்ல பாதை அமைத்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர்.

Tags : Trichy Collector ,Office ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...