மணப்பாறையில் தாயிடம் ‘தண்ணி’யடிக்க பணம் கேட்ட தம்பிக்கு ஈட்டிக்குத்து ‘பாசக்கார’ அண்ணன் கைது

மணப்பாறை, அக்.20: மணப்பாறை மேலகாட்டுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமி. கணவரை இழந்த இவருக்கு 2 மகன்கள். மூத்த மகன் விஸ்வநாதன் கொத்தனாராகவும், இவரது தம்பி உதயகுமார் டிரைவராகவும் வேலை செய்து வருகின்றனர். இதில் உதயகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று உதயகுமார், தாய் லட்சுமியிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த மூத்த மகன் விஸ்வநாதன் தம்பியை கண்டித்துள்ளார். இதில் கைகலப்பு ஏற்பட்டு வீட்டிலிருந்த எலி குத்தும் ஈட்டியை எடுத்து விஸ்வநாதன், உதயகுமாரை 2 முறை வயிற்றில் குத்தியுள்ளர். இதில், படுகாயமடைந்த உதயகுமார் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தகவலறிந்த மணப்பாறை போலீசார் வழக்குப்பதிந்து விஸ்வநாதனை கைது செய்தனர்.

Related Stories:

>