×

திருட்டு மணல் ஏற்றிய மினி லாரி பறிமுதல்

நீடாமங்கலம், அக.20: நீடாமங்கலம் பகுதிகளில் உள்ள கோரையாறு, வெண்ணாறு, பாமனியாறுகளில் டாடா ஏசி (மினி லாரி), டயர் வண்டி, டிப்பர், மாட்டு வண்டிகளில் அரசு அனுமதியின்றி மணல் திருடி அதிக விலைக்கு விற்பதாக நீடாமங்கலம் தாசில்தார் மதியழகன் மற்றும் போலீசாருக்கு கிடைக்கும் தகவலின்படி வாகனங்களை பிடித்து பறிமுதல் செய்து வழக்கு பதியப்பட்டு வருகிறது. இந்திலையில் நேற்று மதியம் ராயபுரம் ஊராட்சி ராஜப்பையன் சாவடியில் நீடாமங்கலம் தாசில்தார் மதியழகன் வாகன சோதனை செய்தபோது திருட்டு மணலுடன் வேகமாக வந்த மினி லாரியை மடக்கி பிடித்தனர். அப்போது வாகனத்தை விட்டு விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். தாசில்தார் வாகனத்தை பறிமுதல் செய்து நீடாமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED கழிவுநீர் லாரியை சிறை பிடித்து திமுகவினர் போராட்டம்