×

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, அக்.20: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளர் எண்ணிக்கை 10,278 ஆக உயர்ந்துள்ளது.அதே நேரத்தில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 48 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9,760 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையில் மாற்றமில்லை, மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 147 ஆகத் தொடர்கிறது. இந்நிலையில், மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை நேற்று நிலவரப்படி 371 ஆகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Corona ,Pudukkottai district ,
× RELATED மேலும் 154 பேருக்கு கொரோனா: இருவர் பலி