×

வரதராஜப்பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா

புதுக்கோட்டை, அக்.20: புதுக்கோட்டை  வரதராஜப்பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலத்துடன் நடைபெற்றது. நவராத்திரியை முன்னிட்டு கோயிலில் மூலவர்  வரதராஜப்பெருமாள் .அலமேலு மங்கை தாயார், சக்கரத்தாழ்வார் சுவாமிகளுக்கு அபிஷேகங்களுடன் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அலமேலு மங்கைதாயார் சந்தனக்காப்பு மலர் அலங்காரத்திலும் மூலவர்  வரதராஜப்பெருமாள், தாயார் தேவி,பூதேவி மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நவராத்திரி விழாவில் உபயதாரர்கள், சிறுவர்கள், பெரியவர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். பொன்னமராவதி: பொன்ன மராவதி அருகே வேகுபட்டி கல்யாண வெங்கடேஸ்வர கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு கொலு வைத்து வழிபாடு நடந்தது. நவரத்திரி விழா தொடங்கப்பட்டு கோயிலில் கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் தினசரி சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags : Navratri festival ,Varatharajaperumal temple ,
× RELATED குளத்தூர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவு